Tamil
Call +44 208 151 0039
மாத்தளை - இரத்தோட்டை எலகலயைப் பிறப்பிடமாகவும், இல-17A, ஆற்றங்கரை வீதி, களுதாவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புவனேஸ்வரி நடராஜன் அவர்களின் உத்தரக்கிரியை அழைப்பிதலும் நன்றி நவிலலும்.
மலர்ந்த முகம் மறைந்ததாலும்,
மனங்களில் மாயவில்லை உங்கள் புன்னகை.
விடிந்த காலையின் ஒளிபோல்,
நம் நினைவில் என்றும் நீங்கா உங்கள் நிழல்.
அன்பை விதைத்த உங்கள் கைகள்,
இன்று ஆசீர்வாதமாக மலர்கின்றன.
நினைவு நதி ஓடிடும் நாளில்,
நீங்கள் நம்முள் வாழ்கிறீர்கள் நிலையாக.
உத்தரகிரியை இந்நாளில்,
உங்கள் நினைவுடன் நாங்கள் ஒன்றிணைகிறோம்.
உங்கள் ஆத்மா சாந்தியுடன் நிலைத்திட,
எங்கள் பிரார்த்தனைகள் மலராக மாறுகின்றன.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், ownstorytamil.com ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
எதிர்வரும் 12.11.2025 புதன்கிழமை மாலை எமது இல்லத்தில் கல்லூன்றி அந்தி சாஸ்திரமும், 13.11.2025 வியாழக்கிழமை காலை இடிந்தபள்ளம் ஆற்றங்கரையில் நடைபெறும் கருமக்காரியங்களிலும், தொடர்ந்து எமது இல்லத்தில் நடைபெறும் புண்ணியாகவாசன நிகழ்விலும் கலந்து இறைவனை பிரார்த்திப்பதோடு தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

11 Oct 1958 - 15 Oct 2025